Posts

Showing posts from May, 2019

ஜூன் – 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன

Image
உலகக் குழந்தைகளின் நலனுக்காக  1925 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது . உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது .  குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும் ,  முடிவுகளும் எடுக்கப்பட்டன . இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன்  – 1  ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன

ஜூன் 1-ம் தேதி முதல் உலக பால் தினம்

Image
  ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின் படி உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கழகம் [Food and Agriculture Organization (FAO)] 2001-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் உலக பால் தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்க படுகிறது. இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால் . தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது

நோதாஜி நினைவு தினம் may 27

Image
          நோதாஜி நினைவு தினம்                                                                                   இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று  அவரது நினைவு நாளாக கூறப்படுகிறது.  “நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்தான் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தார். ஆனால், அவருக்கு செல்ல வேண்டிய புகழ்களையும், அங்கீகாரத்தையும் காந்தி தட்டிப் பறித்துக்கொண்டார்” ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், குடியரசுத் தினத்தின்போதும், வாழ்த்து செய்திகளுக்கு இணையாக இணையத்தில் அதிகமாக பகிரப்படும் பதிவு இது. ஹிட்லர், முசோலினி போன்றோரின் உதவியுடன் நேதாஜி கடுமையாக போர் புரிந்ததால் தான், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டிய நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட்டதாக நேதாஜியின் ஆத...