நோதாஜி நினைவு தினம் may 27
நோதாஜி நினைவு தினம்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று அவரது நினைவு நாளாக கூறப்படுகிறது.
“நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்தான் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தார். ஆனால், அவருக்கு செல்ல வேண்டிய புகழ்களையும், அங்கீகாரத்தையும் காந்தி தட்டிப் பறித்துக்கொண்டார்”
ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், குடியரசுத் தினத்தின்போதும், வாழ்த்து செய்திகளுக்கு இணையாக இணையத்தில் அதிகமாக பகிரப்படும் பதிவு இது.
ஹிட்லர், முசோலினி போன்றோரின் உதவியுடன் நேதாஜி கடுமையாக போர் புரிந்ததால் தான், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியே ஆக வேண்டிய நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட்டதாக நேதாஜியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வாதத்தை முன்வைத்து வருகின்றன.
ஆனால், 1940களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கு எதிராக வீரம்செறிந்த போரில் ஈடுபட்டிருந்த நேதாஜி 1945க்கு பிறகு என்ன ஆனார்? என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
விமான விபத்து ஒன்றில் நேதாஜி இறந்துவிட்டதாக இந்திய அரசு தெரிவித்திருந்தாலும், அவரின் ஆதரவாளர் பலர் அதனை நம்ப தயாராக இல்லை.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்பட்டதை அடுத்து, அது குறித்து விசாரிக்க 1956ஆம் ஆண்டு இந்திய அரசால் ஷாநவாஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. சில ஆய்வுகளை மேற்கொண்ட அக்கமிட்டி நேதாஜி இறந்து விட்டதை தனது அறிக்கையில் உறுதி செய்தது. ஆனால், விமான விபத்து நடைபெற்றதாக கூறப்படும் தைவானுக்கு ஷாநவாஸ் கமிட்டியினர் செல்லவே இல்லை எனவும், கண்துடைப்புகாகவே இந்திய அரசு இந்த விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் அப்போது முன்வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து நேதாஜி இறப்பு குறித்து விசாரிக்க இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் 1974ஆம் ஆண்டு கோஸ்லா கமிஷனும், அதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது.
2005ல் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த முகர்ஜி கமிஷன், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை எனவும், அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பு இருந்ததாகவும் தெரிவித்தது. 2005ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை அப்போதைய காங்கிரஸ் அரசு காரணம் கூறாமல் நிராகரித்தது.
1948ல் ரஷ்யாவுக்கான இந்திய தூதராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், ரஷ்யாவில் வைத்து நேதாஜியை பார்த்ததாகவும், வியட்நாம் புரட்சியாளர் ஹோசிமின் உடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததற்கான ஆதாரங்கள் அந்நாட்டில் உள்ளதாகவும், நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் இறுதிச்சடங்கில் நேதாஜி துறவி போன்ற வேடத்தில் பங்கேற்றார் எனவும் அடுக்கடுக்கான பல வாதங்களை நேதாஜியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.
நேதாஜியின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அச்சமடைந்த காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்கள் நேதாஜின் சாதனைகளையும், தியாகத்தையும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்பதே, நேதாஜி ஆதரவாளர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
அவரது இறப்பு மர்மமான ஒன்றாக இருந்தாலும், “சிறிது ரத்தம் தாருங்கள். நிறைய சுதந்திரம் தருகிறேன்” என கர்ஜித்து, படை திரட்டி, 2-ம் உலக போரில் பிரிட்டன் அரசை ஆட்டம் காண செய்த நேதாஜியின் தியாகத்தையும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அவரின் முக்கியத்துவத்தையும் மக்களால் இன்றும் மறக்க முடியாது.
Comments
Post a Comment