எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான இறால் இலங்கையில்?
உலக இறால் தினம் இன்று எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான ஈ.எம்.எஸ் எனும் பயங்கரமான பக்டீரியா அடங்கிய ‘வண்ணமி’ எனும் விசேடமான இறால் வகை ஒன்றினை, இலங்கைக்கு கொண்டு வருவதைத் தடுக்கக்கோரி, ஸ்ரீலங்கா மீன்வளர்ப்பு அபிவிருத்தி கூட்டணியின் தலைவர் கமல் நாணயக்கார சிலாபம் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். இந்தக் கோரிக்கையின் பிரதியை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் தனிமைப்படுத்தும் மையத்திற்கும் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த இறால் வகைகளை அமெரிக்காவின் ஹவாயில் இருந்து விமான மூலம் கொண்டு வருவதற்கு நேற்றைய தினம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு முன்னர் வண்ணமி போன்ற இறால் வகைகளை இலங்கையில் வளர்க்கப்படவில்லை என்றாலும் இரண்டு வருட காலமாக இதனைப் பற்றிய கலந்துரையாடல்கள் பல நடைபெற்றன. வண்ணமி இறால் வகைகளை இலங்கைக்கு கொண்டு வருவது விடயமாக இரண்டு கருத்துக்கள் நிலவியது. இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இறுதியான முடிவை எடுப்பதற்கு கலந்துரையாடல் ஒன்று சிலாபத்தில் ந...