உலக காது கேளாதோர் தினம் இன்று

உலக காது கேளாதோர் தினம்

உலக காது கேளாதோர் தினம்
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகில் 7 கோடி பேர் காது கேளாமல் உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக காது கேளாதோர் அமைப்பு தெரிவிக்கிறது. 1958ல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது காது கேளாதோர் வாரமாக மாற்றப்பட்டது. செப்., கடைசி ஞாயிறு (செப்., 30) இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகின்றனர். நமது காது சாதாரணமாக 20 ஹெர்ட்ஸ்ல் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் பெற்றது. ஒரு கிலோ ஹெர்ட்ஸ் = 1000 ஹெர்ட்ஸ்.

Comments