தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளையும் அறிவியலின்பால் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்தும் நோக்கோடு 1987-ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது அது முதல் இத்தினத்தை நமது புதுவை அறிவியல் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றன
வரலாறு: இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்ற தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும். பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அறிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதியைத்தான் தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சர்.சிவி.இராமன்: சென்னை மாநிலக் கல்லூரியில் 1904 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இவர். கடலின் நீல நிறத்திற்குக் காரணம் ஒளிச்சிதறலே என்பதையும், முப்பட்டகத்தின் வழியாக வெண் கதிர் செல்லும் போது ஏழு நிறங்களாகப் பிரியும் என்பதையும் கண்டுபிடித்து 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசையும் வென்றார்.
தேசிய அறிவியல் தினம் ஏன்?
அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். அவன் வாழ்கை தரம் உயர வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும், ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள அறியவேண்டும். வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது, அவற்றை நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.
நோக்கம்: எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும்,. அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
அறிவியலின் சாராம்சம் இது தான்.
ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள். அது தான் கல்லோடு வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. என்று கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும். அனைவருக்கும் எனது தேசிய அறிவியல் தின வாழ்த்துக்கள்.
2017 ஆம் ஆண்டின் கருப்பொருள்:
“மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பமத்தின் பங்களிப்பு” என்பதை 2017ம் ஆண்டை கருப்பொருளாக இந்திய அரசும், ஐ.நா.வின் 70வது பொதுசபை 2017 ஆம் ஆண்டை ‘சர்வதேச சுற்றுலா மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஆண்டாக’ அறிவித்து பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகிறது.
Comments
Post a Comment