பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் நவம்பர் 25, 2016 Share Tweet Pin Email Share Share Share Share Share பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் நவம்பர் 25, 2016 Share Tweet Pin Email Share Share Share Share Share பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) இன்றாகும். உலகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் முன்னேற்றமடைய வேண்டும் எனும் இலட்சியப் போக்குடன் பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து சாதித்து வருகின்றனர். புதிய துறைகளில் இன்று சாதனைகளை நிலைநாட்டிவருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள் என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவனின் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விடயமாக மாறிவந்துள்ளது. இந்நிலையில் ஓவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதி உலகளாவிய ரீதியில் ஒரு சிறப்பு நாளாக பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்க...